- Tuesday
- January 13th, 2026
புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தந்தைகள் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் உள்ளடக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக...
நச்சுப் பொருட்களை உட்கொண்ட, திரவங்களை அருந்திய, விஷ ஜந்துக்களின் கடிக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி செய்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம்...
சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி...
மோட்டார் வாகனங்களுக்குரிய அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தால் மட்டுமே புகைப்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட் டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, புகைப்பரி சோதனை என்றால் என்ன என்ற தெளிவு பலரிடம் இல்லை. புகைப்பரி சோதனை செய்துகொள்ள வரும்...
சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினுடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge இன் நான்காவது பருவத்தின் அறிமுகமும் ஆரம்பமும், எதிர்வரும் சனிக்கிழமை (12) மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில்...
யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார அதிகாரி தனசேகரன் வசந்த சேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு குழு...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...
நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குரிமையினை இழந்தவர்கள் அது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் தங்களது...
யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடாக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிறுவனத்தினூடாக வறுமைநிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குரிய தேவைக்கேற்ப செயற்கை அவயவங்கள் நடமாட உதவும் உபகரணங்கள் மற்றும் உளவள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை...
வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...
யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2014ஆம் ஆண்டு வரையிலான மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுகள் கணனி மயமாக்கப்பட்டுள்ளதுடன் எல்.ஜி.என் வலையமைப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ளது....
நெல்லியடி நச்தைப் பதகுதியில் இயங்கும் பழக்கடைகளில் மருந்து விசிறப்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லியடிப் பொதுச்சந்தையில் 10 மேற்ப்பட்டடோர் பழ வியாபாரம் செய்து வருகின்றர். தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் தமது விற்பனையை அதிகரிக்கு நோக்கில் மருந்து விசிறி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். மருந்து விசிறப்பட்ட...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் செயற்பாடுகள் நோயாளர்களை மேலும் நோய்களுக்கு உள்ளாக்குகின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அசட்டையாகவே செயற்படுவதாகவும் மக்கள் சாடியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் உணவுக்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் இருக்கும் இந்த சிற்றுண்டிச்சாலையையே நம்பியுள்ளனர். ஆனால் இந்த உணவு...
யாழ்.மாவட்டத்தில் திடீரென அதிகரித்துள்ள விபத்துக்களால், கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும் 700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம்...
அண்மையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்திய சர்வதேச தர அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகள் அல்லாத ஏனையோருக்கு திணைக்களத்தின் உள்வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் லக்ஷான் டி சொய்ஸா தெரிவித்துள்ளார் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. 'ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்' என்ற கருப்பொருளிலே ஆய்வுக்...
இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ - கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார். கொக்கோ - கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய...
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...
நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...
Loading posts...
All posts loaded
No more posts
