- Thursday
- July 17th, 2025

ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத...

நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்...

எதிர்பாராத விதமாக நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளது. ஒரு பகுதியில் அதிகளவான மின்சாரம் தேவைப்படும் போது அங்கு மின்சார தடை ஏற்படும் என மின்சாரசபையின்...

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி...

நவம்பர் மாதம் அளவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்யும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்....

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுகாலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைகடத்த முயற்சித்தமை, வைத்திய சபையின் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர்...

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...

டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன. நோயாளர்களை அவசரமாக...

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவு ள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர்...

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கையர்கள் தென்கொரியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில்...

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்...

கனிய வள அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் நடைப்பெறாவிட்டால் முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தற்காலிமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க தரப்பில் இருந்து எந்த விதமான உறுதி...

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...

இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை. “அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை,...

இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆரம்பிக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருவார காலம் ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இம்முறை, முதியோர் தினத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நூறு வயதைத் தாண்டியவர்களையும்,15 பிள்ளைகளைக் கொண்ட 75 வயதைத் தாண்டிய பெற்றோர்களையும் கௌரவிப்பதற்காக, அவர்கள் தொடர்பில் தகவல்களைத் தங்களுக்கு வழங்குமாறு அச்செயலகம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை, பிரதேச செயலகத்தில், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குமாறு, அச்செயலகம்,...

All posts loaded
No more posts