வெப்பமான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் பெற்றுள்ள நிலையில், வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு, வளிமண்டலத்தில் நீராவியின் அளவு மேலோங்கியுள்ளதால் இந்த சூடான காலை நிலவுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காச நோய்க்கு சிகிச்சைப் பெறாவிடின் சிறைக்குச் செல்ல நேரிடும்

காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
Ad Widget

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் கலந்துரையாடல்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

சமூக வலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை!

பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார். அத்துடன், இவ்வாறான...

வடக்கில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு முதல்வர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!!

வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார். ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர்,...

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம்!!

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் பாதிக்கப்படும் அதேநேரம் கேட்கும் திறனும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 50 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட,...

யாழில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கு சமூக வலைத்தளங்களே காரணம்!!

பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என யாழ் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி தெரிவித்துள்ளார். வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்...

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு! – பேஸ்புக் நிறுவனம்

இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக்...

சட்டவிரோத மணலுடன் எடுத்துவரப்படும் வெடிபொருட்கள்!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக்...

மாற்றுவழிகளில் பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை !!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும்...

ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்...

15 வயதையடைந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை...

யாழ் பல்கலைக்கழக பதிவாளரின் முக்கிய அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...

சிரிய படுகொலையினை கண்டித்து கண்டனப் போராட்டம்

சிரிய படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும் மாலை 4 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் நடைபெறவுள்ளது. இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் இனப்படுகொலைக்கு...

நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி!! -பலத்த காற்றும் வீசலாம்!!

வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். ஏனைய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

நிலவும் அதிக வரட்சி காரணமாக கண்களுக்கு பாதிப்பு!!!- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளியினால் இதுவரை 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளதாக கட்புல மருத்துவநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். அனுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மன்னார், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்திலேயே மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். எனவே கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் கண்ணாடிகளை...

இறுதி நேரம் வரை காத்திருக்காது உடனே சென்று வாக்களியுங்கள்!!!

"உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு இன்று(10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும். இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல்...

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டைகள்

புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு ,அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை,...
Loading posts...

All posts loaded

No more posts