Ad Widget

வடக்கின் சட்டவிரோத கட்டடங்கள்: நல்லூர் சபையின் அதிரடி தீர்மானம்!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தையும் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு, சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய அமர்வில் சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்கப்படுவது குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது சட்டவிரோத கட்டங்கள் தொடர்பாக எவ்வாறான முடிவினை மேற்கொள்வது என தவிசாளர் உறுப்பினர்களிடம் வினவினார்.

அதற்கமைய, சபையின் ஒப்புதலின்றி புதிதாக சட்டவிரோதமான முறையில் கட்டங்களை அமைக்க வேண்டாம் என மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும், அதனை மீறி சட்டவிரோதமாக கட்டடங்களை மக்கள் அமைக்க முற்படுகின்றபோது அவற்றை ஆரம்ப நிலையிலேயே இடித்தழிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என கருத்துக்கள் முன்மொழியப்பட்டு, அவை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts