சத்திரசிகிச்சை உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும்: யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்

தைரொட்சைட் (கண்டக்கழலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் து.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் 2 சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் காது, மூக்குத் தொண்டைப் பிரிவு மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் பல கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றினைச் செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தந்து உதவ முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால், தைரொட்சைட் சத்திரசிகிச்சையினை மிகச் சிறப்பாக மேற்கொள்ளமுடியும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts