- Thursday
- October 15th, 2026
மக்களின் நடிகராகவே தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். மிகப் பெரிய விருதுகளையோ, திரைப்பட விருதுகளையோ வாங்கியதில்லை. இந்திய அரசாங்கத்தின் பத்மபூஷன் விருது அவருக்கு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அது தவிர சில தனியார் விருதுகளும், சில குறிப்பிட்ட திரைப்பட விருதுகளை வாங்கியிருக்கிறார். இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள்...
தூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார். இந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை. தூங்காவனம் வெளியாகும்...
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் 'நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்...
இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டி விழாவிற்காக தான். இதில் ரகுமான் பாடல்களை வெளியிட் முருகதாஸ்...
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு...
நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம்...
ஏ.ஆர்.ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சியால் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது. சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கின்ற இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம்...
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பெரிய ஹிட்டானதையடுத்து, இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய ‘எனக்கு இன்னொரு பேர்...
பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான். இவர்கள் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று 'பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி...
ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்குமாறு இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சங்கர் அழைப்பு விடுத்தார். ஆனால், வில்லன் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் சொன்னதால், அந்த முடிவை கைவிட்டதாக அமிதாப்பச்சன் சமீபத்தில் தெரிவித்தார். பின்னர், வில்லன்...
விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். இதில் விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே...
இந்த வருட பொங்கல் பண்டிகையின்போது, இந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்புத் திரைப்படங்களின் முழுப்பட்டியல். வெள்ளிக்கிழமை சன் டிவி காலை 11 மணி - சிங்கம் மதியம் 2 மணி - ஜில்லா மாலை 6 மணி - பாபநாசம் விஜய் டிவி மாலை 6 மணி - 10 எண்றதுக்குள்ள கலைஞர் டிவி காலை...
நடிகர் சங்க தேர்தல் பொதுத்தேர்தல் போன்று பரபரப்பாக பேசப்பட்டதற்கு விஷால் அணியினர் களம் இறங்கியதே முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் முடிவுக்குபிறகு, ‘அனைவரும் இனி சமம்’ என்று விஷால் கூறினார். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர்... நடிகர் சங்க பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். என்றாலும், சங்கம் வேறு, நடிப்பு தொழில்...
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் திறம்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் கமல்ஹாசனையும் தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல் பிரபல இயக்குனர்கள் ஷாஜி கருன், கவுதம் கோஷ் ஆகியோரும் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிறார்கள். பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல்...
1000 படங்களுக்கு இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜாவைக் கொண்டாடும் வகையில் அவரது இசைக்கு ஓவியங்களை வரையவிருக்கின்றனர் 50 முன்னணி ஓவியர்கள். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் இதுகுறித்துக் கூறியதாவது: "இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமுதாயத்துக்குக் கிடைத்த பொக்கிஷம். இதுவரை 1000 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். இது பெரிய சாதனை...
பீப் பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள், சிம்பு மற்றும் இந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்படும் இசையமைப்பாளர் அனிருத்...
பீப் பாடல் பிரச்சினைக்குப் பின் சிம்பு - அனிருத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறதே தவிர சற்றும் குறைந்தபாடில்லை.இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனிருத் தற்போது வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சிம்பு-அனிருத் இருவரும் மீண்டும் ஒரு...
காமெடி வேடத்தில் நடித்து வந்த கருணாஸ் பின்னர் கதாநாயகன் ஆனார். இவர் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ வெற்றி பெற்றது. அடுத்து ‘அம்பா சமுத்திரம் அம்பானி’, ‘சந்த மாமா’, ‘ரகளபுரம்’, ‘லொடுக்குப் பாண்டி’ படங்களில் நடித்தார். தொடர்ந்து இது போன்று கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அவருக்கு அமையவில்லை. எனவே, இப்போது மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில்...
தமிழர்கள் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி, வருடந்தோறும் ரசிகர்களுக்கு விருந்தாக பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும். கடந்த வருடம் (2015-ல்) ‘ஐ,’ ‘ஆம்பள,’ ‘டார்லிங்,’ ‘ஆய்வுக்கூடம்’ ஆகிய 4 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருட பொங்கலுக்கும் 4 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. பொங்கலுக்கு முன்தினமே போகி பண்டிகை அன்று (14-ந் தேதி) 4...
Loading posts...
All posts loaded
No more posts
