- Thursday
- October 15th, 2026
‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல்...
எல்லாருக்கும் எதாவது ஒன்றை ராசியாக கருதும் எண்ணமிருக்கும். தன்னம்பிக்கை மிகுதியாக இருப்பவர்கள் கூட அவர்களது முக்கியமான செயல்களில் ஈடுபடும் போது எதாவது ஒரு விஷயத்தை ராசி என கருதி அதை தவறாமல் செய்வார்கள். மாணவர்கள் ஒரே பேனாவை தேர்வுக்கு எடுத்து செல்வதில் தொடங்கி, ராசியான நாள், கிழமையில் முக்கியமான செயல்களை செய்வது வரை இது தொடர்கிறது....
காப்புரிமை பிரச்சினை காரணமாக விஜய்யின் தெறி டீசரை, வெளியான 12 மணி நேரத்துக்குள் நீக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது யு ட்யூப். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம்....
அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் விசாரணை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகவுள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளிடையே வெளிவரும் விசாரணை வெளிவருவதற்கு முன்பே, திரையுலக பிரபலங்கள் பலருக்கும் இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர்....
லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக கால் பரப்பியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போது ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம்...
ரஜினிகாந்த் வாழ்க்கையை படமாக எடுப்பது நல்ல யோசனைதான்... ஆனால் அதற்கேற்ற பொருத்தமான நடிகர் கிடைப்பது மிகக் கடினம்' என்று இயக்குநர் மணிரத்னம் கூறினார். 8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னம், பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 'எம்ஜிஆர், அம்பானி போன்ற பல முன்னணி நபர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளீர்கள். ஏன்...
சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்தது. இந்த ட்ரைலர் வெளிவந்த அரை மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து விட்டனர். இந்த ட்ரைலரை தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்பு பகிர்ந்தார். இதில் ‘இப்போ தெறிக்க விடலாமா இல்லை ஓட விடலாமா’ என குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் பீப்...
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு எப்போதும் தரமான படங்களை கொடுப்பவர். இவருக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் சினிமா களத்தையே மாற்றியவர் பாரதிராஜா. இவர் நீண்ட வருடமாக குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். ஆனால், அது இன்று வரை அவரால் முடியவில்லை. ஆனால், பாலா இக்கதையை படமாக்குகிறேன் என்று சொன்னது மட்டுமில்லாமல் வேகமாக அதற்கான பணிகளை...
நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல்கள் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக நடிகர் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, அவர் மீது பதிவான வழக்குகளில்...
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ள பிரபுதேவா, கடைசியாக தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா, தற்போது தமிழில் நடிக்க ஆர்வம் காண்பித்துள்ளார். இவர் நடிக்க இருக்கும் புதிய...
ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில்...
கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் - பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தில் நாயகிகளாக கேத்ரீன் தெரசா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும்,...
தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன் அஜீத் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்திற்குப் பின்னர் அஜீத் 2 மாதங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு லண்டன் செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் அடுத்து நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அஜித்தை...
சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'போர்க்களத்தில் ஒரு பூ' திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது....
அனிருத் சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே விஜய்-அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனால், சமீபத்தில் இவர் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியது இவருடைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பல படங்களில் இருந்து அனிருத் வெளியேற்றப்பட்டார். நேற்று நடந்த விருது விழா ஒன்றில் மாரி படத்திற்காக அனிருத்திற்கு சிறந்த...
சிவகார்த்திகேயன் இன்று விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார். இவரின் வளர்ச்சி குறித்து நாங்கள் கூற தேவையில்லை, தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிவார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘ஒவ்வொரு...
யாழ் திரைப்படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம்.இதுவரை தமிழ் சினிமாவில் பல ஈழத்து பதிவுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு கமர்ஷியல் அம்சமும் இல்லாமல் மனதில் பட்டதை மிக நேர்மையாக யாழ் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்.நந்தா படத்தில் நம்மை எல்லாம் நடிப்பால் மிரட்டிய வினோத் கிஷன் கதாநாயகனாக...
பொங்கலுக்கு வெளியான தாரை தப்பட்டை படத்தை வைத்து பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தில் நடித்த வரலட்சுமிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுவும் உச்சநட்சத்திரத்திடமிருந்து. பாலாவின் படங்கள் குறித்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், அவற்றைப் பார்த்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறுவதில்லை ரஜினி. நான் கடவுள் பார்த்த ரஜினி, தமிழ் சினிமாவே தலை நிமிர்ந்து...
நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். நேற்று படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
