மர்ம மனிதன் : வில்லன், திருநங்கை வேடத்தில் விக்ரம்

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் மர்ம மனிதன் திரைப்படத்தில் விக்ரம் திருநங்கையாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 என்றதுக்குள்ள படத்திற்குப் பின்னர் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் திரு ஆகியோரின் படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் ஆனந்த் ஷங்கர் படத்தில் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம். தற்போது தமிழின்...

உண்மையிலேயே அரசியலுக்கு வருகிறாரா அஜீத்…?

கடந்த சில தினங்களாக செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் தீவிரமாய் பரவிவரும் சமாச்சாரம்.. பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அஜீத்... தமிழக பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முன் களமிறங்கப் போகிறார் என்பது. இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத அஜீத்தின் ரசிகர்களும் சில ஊடகங்களும் அவர் அரசியலில்...
Ad Widget

குடியரசு தினத்திற்கு தள்ளிப் போனது விஜய்யின் தெறி டீசர்?

விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் வருகின்ற குடியரசு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு...

தெறி தீம் மியூசிக்கை வெறித்தனமாக உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘தெறி’ படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். "தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது...

சிங்கம் 3-ன் புதுப் பெயர் ‘எஸ்3′..!

ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மூன்றாகம் பாகத்துக்கு வழக்கம்போல சிங்கம் தலைப்பைச் சூட்டாமல், புதிய தலைப்பைச் சூட்ட முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பையும் முடிவு...

தனுஷ் அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தனுஷ். ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். இதனால் தனுஷ் - அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா? என்ற கேள்வி தமிழ்த்திரையுலகில்...

இன்னும் எனக்கு 50 வயசு கூட ஆகலீங்க!- இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்

தமிழரின் பெருமையை உலக அரங்கில் கம்பீரமாக அரங்கேற்றிய கலைஞர்களில் ஒருவரான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். உலகின் மிக பிஸியான இசைக் கலைஞனான அவருக்கு உலகமே இன்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ரோஜாவில் தொடங்கிய அவர் இசைப் பயணம், இன்று மொழிகள், நாடுகள் என்ற எல்லைகள் தாண்டி உலகெங்கும் வியாபித்து...

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை – டி.ராஜேந்தர்

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை...

மாதவன் தமிழ் சினிமாவின் சொத்து – சூர்யா

மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம் ‘இறுதிச்சுற்று’. இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, பாலா, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர்....

இது பார்த்திபனின் ‘பீப்’ பாடல்…

வெள்ளம் பாதித்த சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை எழுதி, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிம்பு மீதும், அனிருத் மீதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை...

ரஜினி சொன்னதால் தான் அமிதாப் நடிக்கவில்லை!

ரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம். அமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம். அதனால்...

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன் !

தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிது தான். அப்பா, மகள் என இந்திய சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர்கள் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்களாம். படத்திலும் அப்பா, மகளாகவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படம் குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யாராய் குழந்தை ஆரத்யா பிறந்த பிறகு சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். ‘ஜஸ்பா’ படம் மூலம் மீண்டும் ‘பாலிவுட்’ பட உலகுக்கு திரும்பினார். ஆனால் இந்த படம் எதிர் பார்த்தபடி ஓடவில்லை. தற்போது, கரண் ஜோகிதர் இயக்கத்தில், ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். ரன்பிர் கபூர் ஹீரோவாக...

அனைவரும் இணைந்து பணியாற்றினால் மாற்றம் வரும்- சூர்யா

சென்னை சாந்தோம் செயின்ட் பீட்டஸ் பள்ளியில் அகரம் பவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு 2 நாள் கருத்தரங்கம் யாதும் ஊரே என்ற பெயரில் நடைபெறுகிறது. நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நடிகர் சூர்யா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:– உலகில் 130 லட்சத்துக்கும் அதிகமான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அதில் ஒரு உயிரினம்...

ரசிகர்களுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். கடந்த சில ஆண்டுகள் வரை தனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். சில காரணங்களால் இந்தச் சந்திப்பை திடீரென்று நிறுத்திக் கொண்டார். ரசிகர்களின் சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவே தனது பிறந்த...

என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமா – எமி ஜாக்சன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருப்பவர் எமிஜாக்சன். அவர் தனது நடிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தங்கமகன் படத்தில் தனுசுடன் நடித்தது ஜாலியான அனுபவம். நான் நன்றாக நடிப்பதற்கு அவர் உதவினார். எந்த மொழி படமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்வேன். வசனங்களை புரியும்படி எழுதி வைத்துக் கொண்டு படிக்கிறேன். என்னை நடிகை ஆக்கியது...

எதிர்காலத்தை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மதுரை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்கு வெளியேயும், வீட்டிற்குள்ளேயும் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் குறித்து...

இளையராஜாவின் ‘தாரை தப்பட்டை’ ரஹ்மானின் ”அச்சம் என்பது மடமையடா” டிரெயிலர் வெளியீடு

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தாரை தப்பட்டை. இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும் கதை தான் கதகளி: விஷால் பேச்சு

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, ‘எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் ‘கதகளி’ என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் கதகளி...

படப்பிடிப்பில் அசுர வேகம் கொண்டவர் விஜய் ஆண்டனி: சாத்னா டைட்டஸ்

கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கி உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக சாத்னா டைட்டஸ் அறிமுகமாகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக...
Loading posts...

All posts loaded

No more posts