- Thursday
- October 15th, 2026
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தற்போது டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாகப் படமாகி வரும் படம் '2.0'. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடனும் கெடுபிடியுடனும் ஆரம்பமானது. படப்பிடிப்பு தளத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வரக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 'கபாலி'...
'ரஜினி முருகன்' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஒரு படத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தப் படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம். அதற்குக் காரணம் விஜய் படம்தான் என்கிறார்கள். விஜய் படம் நடித்து முடித்த பிறகு...
இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட படங்களை சரியான நேரத்தில் சரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதே தயாரிப்பாளர்களுக்கு பெரிய போராட்டமாக உள்ளது. அதிலும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகிறது என்றால் அவர்களுக்குத்தான் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கிறது. இரண்டாம், மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களுக்கு அந்த தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதன்காரணமாக மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே மற்ற நடிகர்களின்...
புலி படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தெறி. ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். முக்கிய ரோலில் மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு...
'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 'தெறி, கபாலி' இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களுக்குமான வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எந்த ஏரியா, என்ன விலை என்ற தகவல் இன்னும் வெளியாகாமலே உள்ளது. சில ஏரியாக்களில் இரண்டு படங்களையும் ஒருவருக்கே கொடுத்துள்ளதாகவும்...
பிரகாஷ்ராஜ் பிற மொழிகளில் வரும் நல்ல படங்களின் உரிமத்தை வாங்கி ரீமேக் செய்வார். மராட்டிய படம் ஒன்றை வாங்கி அதனை தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார். மலையாளத்தில் வெளிவந்து பெற்றி பெற்ற சால்ட் அண்ட் பெப்பர் படத்தை வாங்கி, 'உன் சமையல் அறையில்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்போது மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிய...
கடந்த சில வாரங்களாக சென்னை புறநகரில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இதில் ரஜினியும், அக்ஷய்குமாரும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. சென்னை ரோடுகளில் ராணுவ பீரங்கிகள் அணிவகுத்து வருவது போன்ற காட்சிகளை இன்னொரு யூனிட் படம் பிடித்தது. இந்த நிலையில் 2.ஓ படப்பிடிப்புக்காக டில்லியில் ஒரு பிரமாண்ட மைதானத்தை வாடகைக்கு பிடித்து...
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்த படம் ‛நானும் ரவுடிதான்'. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதே கூட்டணியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார் விக்னேஷ்சிவன். அதோடு, புதிய படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால், இதுவரை இணைந்து நடிக்காத திரிஷா-நயன்தாரா ஆகிய இருவரையும் அந்த படத்தில் இணைக்க...
தெழுங்கு தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெமினி மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாரக பணியாற்றி வந்த நிரோஷா, இன்று (மார்ச் 16) அதிகாலை, தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 23 வயதாகும் நிரோஷா, செய்தி சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றிக்கொண்டே,...
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்துகிறார். அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ராகவேந்திரருக்கு கோவில் கட்டியிருக்கிறார். அடுத்து தன் அம்மாவுக்கு கோவில் கட்டி வருகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு வாங்கிய சம்பளத்தில்...
ஊழல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய அணி பதவியேற்ற பின்னர், பல அதிரடியான நடவடிக்கைகளும், நலத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக...
இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305 கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். ஆனால் இந்த படங்களில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திரமான படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் தான் சூப்பர் ஹிட்டானது. அதனால் விஜய்யின் புலி...
தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், 'எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு' என்று தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சித்...
சிங்கம்-2 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்சிகா. கதைப்படி அந்த பள்ளியில் என்சிசி ஆசிரியராக இருப்பார் சூர்யா. அப்போது சூர்யா மீது காதல கொள்ளும் ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்லும்போது, தனது காதலி அனுஷ்காவையே தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், அவர் தனக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்வார் சூர்யா. அதையடுத்து தனது மனதை மாற்றிக்கொள்வார்...
தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவிருக்கிறதாம். இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்குநடிகர் ஜெகபதிபாபுவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கதைக்கு ஏற்ற வில்லனாக அவர் இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு படத்தைத் தெலுங்கில் வெளியிட அவர் இருப்பது...
தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த சாய்பிரசாந்த் “நேரம்”, “ஐந்தாம் படை” உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் ஆவார். இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில் நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த...
ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் (வீரம் தவிர) ஆகிய படங்களில் நடித்த அஜித், அடுத்தபடியாக பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கும் சோழர் காலத்து கதையில் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வீரம், வேதாளம் என சிவா இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாக அமைந்ததால் தான் நடிக்கும் புதிய...
VSOP என்ற பிரபலமான மது பிராண்டைக்குறிப்பதுபோல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்று தன் படத்துக்கு பெயர் வைத்தார் ராஜேஷ். VSOP என்ற தலைப்பே இளைஞர்களின் கூட்டத்தை தியேட்டருக்கு இழுத்துவரும் என்று கணக்குப்போட்டார். அதற்கு மாறாக அந்தப்படம் படு தோல்வியடைந்தது. ஆனாலும் அதே பாணியில் தன்னுடைய புதிய படத்துக்கும் பெயர் வைத்திருக்கிறார் ராஜேஷ். 'கடவுள் இருக்கான்...
ராடான் நிறுவனம் நடத்திய குறும்பட திருவிழாவில் இறுதி சுற்றுக்கு தகுதியான படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. உலக அளவிலான போட்டியில் அகதிகளாக செல்லும் குழந்தைகள் பற்றிய படமான 'ஓடம்' முதல் இடத்தையும், 'நிழல்' என்ற திகில் படம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனை அஞ்சலி இயக்கி இருந்தார். அவருக்கு விருதை ஆர்யா வழங்கினார். பின்னர்...
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தவர். இதனால் தான் சினிமாவில் வெற்றி பெற்றதும் குறும்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'ஸ்டோன் பென்ஞ்' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். நல்ல குறும்படங்களை தேர்வு செய்து அவற்றை இரண்டரை மணிநேர படமாக தொகுத்து ஒரு திரைப்படம் போன்று வெளியிடுவது. இதன் மூலம்...
Loading posts...
All posts loaded
No more posts
