- Tuesday
- September 15th, 2026
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை...
கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல் தலைவர்களும் தலையிடக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின்...
கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது. இதில்...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய...
பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கோயிலில் மின்கம்பி அறுந்து விழுந்தபோது மக்கள் அலறியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளையும், கூட்ட...
மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை அந்தரா பானர்ஜியை பொலிஸார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர்,'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் சூரத்துக்கு...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 09 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகத் தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால்...
இந்தியாவின் மகாராஷ்டிராவில் இன்று (14) அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
தமிழக சட்டப் பேரவையில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜயால் முன்மொழிக்கப்பட்ட தனி தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில்...
தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு நேற்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி...
தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும்...
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாதி, மதமற்றவர் என சான்று...
இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பதிவு செய்து எக்ஸ் சமூக ஊடகங்கத்தில் பகிர்ந்த காணொளி தற்போது பரவலாகப் பகிரப்பட்டு...
இந்தியாவில் மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை வைத்தியர்கள் அகற்றி, அவரை காப்பாற்றினர். மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இந்த பயணிகள் ரயில் சேவை...
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த...
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் சொந்த ஊர் தெலுங்கானாவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி...
தமிழ்நாட்டில் மாணவர்களை பாடசாலை நோக்கி வரவழைக்கவும், மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வியைக் கற்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்தி...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,...
Loading posts...
All posts loaded
No more posts
