தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் நிதி தேவைக்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.

அந்த வரிசையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அதன்படி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் அரசு வைத்திசாலைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ம வைத்திசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனம் பெற்றது.
இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு வைத்திசாலைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22ஆம் திகதி அறிவித்தார். அன்றைய நாளில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
முதலில் இத்திட்டத்தை தாய்மாமன் சீர் கலாசாரம் அதிகம் உள்ள உசிலம்பட்டி அரசு வைத்திசாலையில் தொடங்க திட்டமிடப்பட்டது. உசிலம்பட்டியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த திட்ட தொடக்க விழா மதுரை ராஜாஜி வைத்திசாலைக்கு மாற்றப்பட்டது.
அதன்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி வைத்திசாலையில் இன்று (28) நடைபெறுகிறது.
இதற்காக முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் 89,955 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மதுரையில் நடைபெறும் விழாவிற்கு முன்னேற்பாடாக 1,106 தங்க மோதிரங்கள் கடந்த வாரம் உசிலம்பட்டி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டன.