தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள்!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இந்த சூழலில் நேற்று தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 8 தீபாவளி பண்டிகையை ஒருபுறம் தமிழக மக்கள் கொண்டாடிய வேளையில், மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் 11 கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இருக்கிறதா? எனக் கேள்வி கேட்கும் அளவிற்கு தேனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீபாவளி நாளில் நடந்த 11 கொலை சம்பவங்கள்

  • சென்னை, திருவள்ளூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1 கொலை நடந்துள்ளது.
  • சிவகங்கையில் 2 கொலைகள் நடந்துள்ளன.
  • தேனியில் போதை கும்பலை தட்டி கேட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • திருச்சியில் சிறார்கள் இருவர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்சொன்ன சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர சாலை விபத்திலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts