- Tuesday
- January 13th, 2026
கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...
இலங்கையின் வடக்குப் பகுதி மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை முல்லைத்தீவில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அளித்துள்ளார். முல்லைத்தீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடி ஆராய்ந்ததன் பின்னர் அதற்கு தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். அரசாங்க அனுமதி பெற்ற...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில்...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானப் பணிகள்...
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு....
முல்லைத்தீவு மாவட்டதில் தொடரும் வெப்பமான காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் காலநிலை மாற்றத்தால் பெருமளவு வெளிநோயாளர்கள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாக அறியமுடிகின்றது. வெப்பம் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிகிடக்கின்றது. எனினும் இன்று காலை சிறிதாக மழைபெய்து ஓய்ந்துள்ளது தொடர்ந்தும் மழை பெய்யாதா என்று முல்லைமக்கள்...
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.குறித்த வீட்டில் இருந்த நபர் தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து இன்று மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் போதைப்...
கடந்த பொதுத்தேர்தலின் போது, தனக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளைப் படம்பிடித்து, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவே, இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்துள்ளார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்ட சிவபாலன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிக்கப்பட்ட யாழ்.மாவட்ட தபால் வாக்குச்சீட்டே, அவருடைய பேஸ்புக்கில் பதிவேற்றம்...
இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர். மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை...
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவு விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன், காணாமற்போனோர் குறித்து 23 புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பிரிவுகளாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இன்று...
"முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் அபகரித்துள்ள பொதுமக்கள் காணிகளை மீளக் கைளித்தல், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்தல் குறித்து எதிர்க்கட்சியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலத்தைத் மீட்டுத் தருமாறு கேப்பாப்புலவு மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு பிள்ளையார் கோயில் முன்றலில் அக்கிராமவாசியான கணேசபிள்ளை என்பவர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அக்கிராமத்தினைச் சேர்ந்த அனைத்து மக்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையை ஜனாதிபதியும் பாதுகாப்பும் அமைச்சும் கருத்தில் கொண்டு...
முல்லைத்தீவு, கொக்கிளாயில் அமைக்கப்படும் விகாரையின் கட்டடப் பணியை நிறுத்துமாறு கொழும்பிலிருந்து வந்த காணி அமைச்சின் அதிகாரிகள் தடையுத்தரவு பிறப்பித்தும் அதனையும் மீறி பிக்கு ஒருவர் விகாரையைத் தொடர்ந்து கட்டி வருகின்றார் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற...
கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...
கிளிநொச்சி - கோரமோட்டை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுழியில் அகப்பட்டு மரணமானார். இவர் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுழியில் அகப்பட்டதாகவும், மாலை 5.18 மணியளவில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மலையாளபுரத்தை சேர்ந்த இருபது வயதான ஸ்டான்லி என்ற இளைஞரே மரணமானதாக தெரியவருகிறது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி...
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய "ஒரு கூர்வாளின் நிழல் " (போராட்ட குறிப்புக்கள்) மற்றும் "போர்க்காலம்" (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பொன். காந்தன் தலைமையில் இந்த நிகழ்வு...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி (சுப்ரமணியம் சிவகாமி) எழுதிய "ஒரு கூர் வாளின் நிழலில்" என்ற நூலை கிளிநொச்சியில் வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டில் தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய...
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம்...
கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய புதிய வழிபாட்டிடம் ஒன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சிப் படைகளுக்கான தலைமையகத் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன திறந்துவைத்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலிருந்து கடந்த ஜனவரிமாதம் வெள்ளரசு மரக்கிளையொன்று கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி படைத் தலைமையத்தில் நடப்பட்டது. அதனையடுத்து அந்த வெள்ளரசு மரத்துக்கான சுற்றுச்சுவருடன் கூடிய சமாதி நிலையில்...
குடியமர வேண்டும். இல்லையேல் காணி அரசுடமையாக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற இந்த வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குள கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கென வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணி...
Loading posts...
All posts loaded
No more posts
