- Wednesday
- January 14th, 2026
ஜனாதிபதியின் உத்தரவை மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் ராணுவத்தினரின் செயற்பாடு, ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்திகடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தை பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...
முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்...
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வாள்வீச்சாக மாறியதில் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வரே மதுபோதையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த வீதியால் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விலக்குத்தீர்க்க முற்பட்ட வேளை,...
மாங்குளம் - துணுக்காய் வீதியில் உள்ள வன்னிவிளாங்கும் பகுதியில் வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற பதில் தபாலதிபரான மாப்பாணப்பிள்ளை கதிர்காமநாதன் (வயது – 57) என்பரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். முதியவரை மோதிய...
முஸ்லீம் ஆசிரியையினால் கிளிநொச்சி அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசிரியரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட...
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறீலங்காவுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா...
கிளிநொச்சி கட்டை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் கவிந்திரன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அவர், கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிவதுடன், பாடசாலை விட்டு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்கின்ற நிலையில் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்....
முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்ப வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் இருந்த குளவிக்கூடு நேற்று (23) கலைந்ததன் காரணமாக விசுவநாதர் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் 30 பேரும் ஆசிரியர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டனர். விஸ்வமடு மகா வித்தியாலய மாணவர்கள் 9 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் குலவிக்கொட்டுக்கு இலக்காகி அவசர நோயாளர் காவுவண்டிகள்...
கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பிரதேசத்தில் மீண்டுமொரு முன்னாள் போராளி கைதாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த முன்னாள் போராளி கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு...
கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...
முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24)...
மாங்குளம் பிரதான வீதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சமய போதகர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒட்டுச்சுட்டான் 17ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது நிறைந்த போதகர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். குறித்த போதகர் கிளிநொச்சி மாவட்ட...
கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....
Loading posts...
All posts loaded
No more posts
