- Monday
- November 10th, 2025
இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடங்களை கடந்துள்ள...
நல்லூர் உற்சவ காலத்தின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் பெறுகின்றார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள். இது தொடர்பில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். வட.மாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாராட்சி...
தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது...
அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிக புள்ளிகளை பெற்றும், தமக்கு நியமனம் வழங்கப்படவில்லையென வவுனியா இராசேந்திரங்குளம் மற்றும் மகறம்பைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சத்தியமூர்த்தி யசிதரன் மற்றும் வேணி என்ற இரு பட்டதாரிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு சகல பரீட்சைகளிலும்...
தமது பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணவத்தினர் தற்போது தமது வாழ்வாதாராத்தையும் முடக்க முயற்சிப்பதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த ஒருவரின் கடையை அப்புறப்படுத்துமாறு முள்ளியவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த எரிபொருள் கடையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,...
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ்...
வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை...
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை...
“வலிகாமம் மேற்கு பிரதேச சபை, மக்களுக்கான அத்தியாவசிய அபிவிருத்திக்கான நிதி, ஆளணி என்பன பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், 40 லட்சம் ரூபா பணத்தில் மின்னுயர்த்தி அமைக்கும் அநாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளது” இவ்வாறு மக்களின் பணத்தை வீணாக்கும் பிரதேச சபையின் செயலை, அந்த பிரதேச சபை உறுப்பினரும் மாற்றுத்திறனாளியுமான சி. இதயகுமாரன் அம்பலப்படுத்தியுள்ளார். மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தரம் 11 மாணவர்களுக்கான பிரதான பாடங்களின் நூல்கள் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நாடுமுழுவதும் அனைத்து தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநுால்களுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “இந்த...
கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....
யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !!
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் கடந்த புதன்கிழமை...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும்...
முல்லைத்தீவு – நித்தகைக்குளத்தையும் அதனோடு இணைந்த வயற்காணிகளையும் விடுவித்துத் தருவதுடன், வயற்காணிகளுக்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக தெரியவருகையில், நித்தகைக்குள விடுவிப்பு மற்றும் வீதி மறுசீரமைப்பு போன்றவை தொடர்பான கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் குமுழமுனை கிழக்கினுடைய கமக்கார அமைப்பினரின் அழைப்பை ஏற்ற...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, ராணுவம் மீண்டும் மூடியுள்ளது. நேற்று முன்தினம் காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றய தினம் (புதன்கிழமை) அங்கு மக்களை ராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 28 வருட காலமாக குறித்த வீதி ராணுவத்த்தின்...
தமிழ்தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உதவும் என நம்பியே வாக்களித்தோம். ஆனால் அவர்களால் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கூட்டமைப்பு உண்மையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிய நடவடிக்கை எதனையுமே இதுவரையில் எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டார்கள். 3 தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியிருக்கின்றார்கள். மதியரசன்,...
நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில்...
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...
உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நேற்று நீக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபில் தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களும், தம்மை பதிவு செய்து கொள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
