நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.... Read more »

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு... Read more »

குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில்... Read more »

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும்... Read more »

யாழில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைகள்!!

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து ,... Read more »

வாள்கள், இராணுவச் சீருடைகள் இருப்பின் இரண்டு நாட்களுக்குள் ஒப்படையுங்கள்!!

வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள்... Read more »

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்தில் ஊடுருவல்!!

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்திலும் ஊடுருவலாம் என அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளது. இதுதொடர்பில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் இலக்கங்களுடனான விவரம் வவுனியா பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லொறி ஒன்றும் 11 மோட்டார்... Read more »

சகல வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்!

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும்.... Read more »

உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடுவோருக்கு சிறைத் தண்டனை!!

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.... Read more »

பாதுகாப்புத் தரப்பினரின் விசேட அறிவித்தல்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப்... Read more »

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை!- இராணுவ புலனாய்வு அதிகாரி

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்... Read more »

தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள்... Read more »

‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வெடிபொருள்களுடனான வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப்... Read more »

பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல்

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால்... Read more »

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. Read more »

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைகழகங்களும் மூடல்!

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை , வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு... Read more »

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்!!!

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நேற்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் இன்று... Read more »

சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!!

இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில்... Read more »