- Friday
- November 21st, 2025
நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...
தைரொட்சைட் (கண்டக்கழலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் து.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில்...
முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாட்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு...
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது. அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள்,...
இளையவர்களின் விவாதத்திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் விவாதச்சுற்றுப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதுக்குட்பட்ட இளையவர்கள்(திறிந்த பிரிவு) என இரு பிரிவுகளாக இவ் விவாதச் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான போட்டி யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் திறந்த பிரிவு போட்டிகள் நாடாளவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளன. திறந்த...
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58...
நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...
நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் பெற்றுள்ள நிலையில், வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு, வளிமண்டலத்தில் நீராவியின் அளவு மேலோங்கியுள்ளதால் இந்த சூடான காலை நிலவுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார். அத்துடன், இவ்வாறான...
வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார். ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர்,...
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் பாதிக்கப்படும் அதேநேரம் கேட்கும் திறனும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 50 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட,...
பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என யாழ் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி தெரிவித்துள்ளார். வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்...
இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக்...
யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக்...
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும்...
அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்...
ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை...
Loading posts...
All posts loaded
No more posts
