Ad Widget

யாழில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கு சமூக வலைத்தளங்களே காரணம்!!

பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என யாழ் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி தெரிவித்துள்ளார்.

வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் நடந்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகளவான சம்பவங்கள் யாழ். மாவட்டத்திலேயே நடந்துள்ளன.

இவற்றுக்கு சமூக வலைத்தள பயன்பாடு உதவியாக இருந்துள்ளது. பிள்ளைகள் கல்வி கற்கும் காலத்தில் சமூக வலைத்தள வசதிகளுடன் கூடிய தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளம் புதல்விகள் உள்ள தாய்மார் தமது பிள்ளைகளின் தொலைபேசிகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அழைப்புகள் குறித்து மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

திருமணமான தாய்மார் தமது குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லவும் குடும்ப வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts