- Wednesday
- August 19th, 2026
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் இரா. சம்பந்தன் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு நேற்றுக் காலை 9.45 மணிக்கு மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து...
மட்டக்களப்பு ஊறணியில், கடும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த பஸ் வண்டி மீது இன்று பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த சிலரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறதது. (more…)
எமது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருக்கும் - அதன் உருவமாகவும் உயிராகவும் இயங்கு சக்தியா கவும் விளங்குகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மட்டக்களப்பு மண்ணில் - நான் உவகையுடன் வரவேற்கிறேன்.தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஆன்மாவினது சின்னமாக விளங்குவதும் உயரிய விழுமியங்களுடன் தனக்கெனத் தனித்து வமான ஓர் அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டதுமான -...
தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான இம்மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து...
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்ந்ததும் தீர்க்கமானதுமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.தெற்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான...
வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டின் பொருளாதார வளங்களை அள்ளிக்கொண்டுச் செல்வதற்காக புதிது புதிதாக யாழில் முளைக்கும் நிதி நிறுவனங்களினால் யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.யாழ்.வணிகள் கழகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)
இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள நிலைமையை ஒத்ததாக வடக்கு கிழக்கிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என தான் நம்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான வருடாந்த அறிக்கையின் வீடியோவில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க...
இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று 24.05.2012 அன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று காணாமல் போனோர், தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்றவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். (more…)
தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெறவுள்ளது. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அழுத்தங்கள்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த தாக்கப்பட்ட சம்பவத்ததை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரும் அனைத்துப்பீடாதிபதிகளும் வன்மையாக கண்டித்துள்ளனர்.இத்தாக்குதலால் மாணவர்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக சுமூகமான செயற்பாட்டிற்கு உதவப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்றுமருத்துவக் கண்காட்சி 21.05.2012 பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக...
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) கே.ஈ.எல். பெரேரா தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் கால வரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்ளோம் என மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதுஇது தொடர்பில் மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.கட்சிப் பதிவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் கட்சிப் பதிவினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)
'எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts



