Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மூன்றாண்டு நினைவையொட்டி யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவுப் பதாகைகள் இரண்டு தினங்களுக்கு முன்னர் தொங்கவிடப்பட்டிருந்தது குறித்து ஏற்கனவே பல்கலைக்கழகச் சுற்றாடலில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மதியம் மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பாக கூடி கோசம் எழுப்பி மு்றுகைப்போராட்டம் நடாத்தினர் துணைவேந்தர் அலுவலகத்துக்கு மாணவர்கள் சிறு கல்வீச்சு நடாத்தியதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. அதனால பாதிப்பு ஏதும் ஏற்படவில்லையென்றும் தெரிவிககப்பட்டது. இறுதியில் வரையபபட்ட துணைவேந்தரின் படத்தினை முன்றலில் ஓலைகள் தேடிகள் போட்டு தீவைத்தனர் அதன்போது பலாக்காய் ஒன்றும் தீயில் போட்டு எரிக்கப்பட்டது.தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மாணவர்கள் கூக்குரலிட்டனர்.மாணவர்கள் பிரதிநிதிகளுடன் துணைவேந்தர் பேச்சு நடாத்தியதையடுத்து மாணவரகள் சிலமணிநேரத்தின் பின் கலைந்துசென்றனர்

இச்சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்துக்குவெளியே பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர் தற்போது ஒருசில பொலிசார் கடமையில் உள்ளனர்.

மக்கள் தமது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை மறுக்கப்படுவதன் வெளிப்பாடே மாணவர்கள் மீதான தொடரும் தாக்குதல்கள் என போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்துதெரிவித்தனர். இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக மனக்கசப்புக்களையும் இன உணர்வுகளையும் தட்டி எழுப்பமுடியுமே தவிர அமைதியையும் சமாதானத்தினையும் நிலைநாட்ட முடியாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


Related Posts