- Friday
- September 12th, 2025

திலீபனின் உருவப்படம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக...

யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய...

கிளிநொச்சி- கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனது வீட்டில் இவர் உயிர்மாய்ப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள்...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது பொலிஸாரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர்...

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது சிங்கக்கொடியினை ஏந்தியிருந்த பெண்கள் உட்பட...

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவ பேரணி தாக்கப்பட்டமைக்கு சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோகம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லஹிரு வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர். பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள்...

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்....

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்திக்கு அருகாமையில் விமானப்படை மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்தி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. இந்த குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் படுகொலை...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு –...

தியாகி திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(15) யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த...

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது. நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், அத்தோடு...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் நேற்று...

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது...

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய அண்மையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. 18 வயதுடைய புவனேஷ்வரன் ஆர்த்தி என்ற மாணவி...

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு...

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக்...

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொக்கு தொடுவாய் மனித புதை குழி அகழ்வுப் பணிகள் கடந்த 6 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 7 ஆவது நாளான நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது 3 மனித...

All posts loaded
No more posts