- Friday
- September 12th, 2025

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன...

தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி செயற்படுவதாக குறிப்பிட்டு இந்த பேரணியை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று...

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20.09.2023) காலை அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

கொழும்பின் பல பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் தடுக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்கிழமை) கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ்...

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில்; ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தழிழ் சிங்கள மக்களிடையே...

யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகம் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு போலி முகவரால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொழும்பைச்...

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடமக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த கலாசாரத்தை நாம் நிறுத்தியே...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது...

அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடானது அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மற்றொரு...

பிரான்ஸின் ரியூனியன் தீவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று (18.09.2023) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் பிரதேசங்களில் வசிப்பவர்கள், அவர்களில் 6 பேர் தமிழர்கள் மற்றும் மற்றைய நபர் சிங்களவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதிகள்...

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடகொரிய ஜனாதிபதி கிம்...

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி.தர்சன் அறிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும் என்றும் அரச வைத்திய...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது. குறித்த ஊர்திப் பவனி வவுனியாவிற்கு வந்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன்,...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது இன்று (திங்கட்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலமையில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக...

திருகோணமலை சர்தாபுர பகுதியில் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனன் குடா பொலிஸாரினால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்லைப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அடக்குமுறை சம்பங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இனவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இந்த...

தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும். ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம்...

திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர். தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையிலேயே இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இதேவேளை, இன்று முல்லைத்தீவிலிருந்து வாகன ஊர்தி அஞ்சலிக்காகப் பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் இருக்கின்றது என்பதை இன்னுமொருமுறை இந்த தாக்குதல் சம்பவம் நிரூபணம் செய்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டில்...

All posts loaded
No more posts