தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யாழ் பல்கலைக்கழகம்!!

யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. அந்தவகையில் குறித்த கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி...
Ad Widget

தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் : மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,...

தெல்லிப்பழையில் உற்பத்தியாகும் பக்கற் யூஸினால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்!!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பக்கற் யூஸ், ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. குறித்த பக்கற் யூஸை அருந்தும் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த மகிழ்ச்சியான செய்தி!!

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துளளார். இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது...

யாழில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!!

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் - புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட தொடருந்து பாதையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...

பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றது. அந்த வகையில் ரஷ்யா, தன் நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் போராட்டம்!!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள்...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு : அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கிணங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா காலத்தின்போது, உயர்த்தரப் பரீட்சைகள், சாதாரணத்தரப் பரீட்சைகள்,...

தியாகி திலீபன் யார்? மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகம்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது. இதேவேளை இன்றைய தினம் கிளிநொச்சி மற்றும்...

யாழில் அதிகாலையில் நடந்த அனர்த்தம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி!!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ட்ரோன்கள் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு, ஈரானால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் - 136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் இராணுவ தலைமையுடன் ரஷ்ய பாதுகாப்பு...

உக்ரைனிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகள்! பரபரப்பு தகலை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக 19 ஆயிரம் குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய போதே ஒலெனா ஜெலன்ஸ்கா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா...

நல்லூர் ஆலய திருவிழாவின் போது பக்தர்கள் தவறவிட்ட பொருட்கள் யாழ். மாநகர சபையில்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார். மகோற்சவ திருவிழாக்களில் கலந்துகொண்ட பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டைகள், பணப்பைகள், மணிக்கூடு, தேசிய...

”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்”: சுவரொட்டிகளால் பரபரப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது. இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத்...

திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரிய யாழ்ப்பாண பொலிசாரின் மனு நிராகரிப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி, ஆறு பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரினால்; கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவு...

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். இதனையடுத்து நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் இடம்பெற்றது....

யாழில். 25 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய்...

வங்கியில் போலிக்கையெழுத்திட்டு பண மோசடி முயற்சி: பொலிஸ் சார்ஜண்ட் கைது!

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முயன்ற குற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் கரவிட்ட பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த சார்ஜென்ட் மேலும் இரு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து போலி...

யாழில் அறிமுகமாகும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைத் திட்டம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனமானது...
Loading posts...

All posts loaded

No more posts