நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் : உடனடி விசாரணைக்கு பணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ”நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட...
Ad Widget

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் பலி!

சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின்...

உரிமைகள் கிடைக்கப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும்!!

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது என நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்கர்ட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்...

லிட்ரோ விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...

மைத்திரியும் கோட்டபயவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பணம் வழங்கினார்கள் – ஆசாத் மௌலானா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதிதருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு!!

நேற்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையக 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும். 1 லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், குறித்த மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு...

தொடரும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்!!

உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சோச்சியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமான தொழிற்சாலையை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. உள்ளூர் ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் சோச்சியின் அட்லர் விமான தளத்திற்கு அருகே புகை மற்றும் வெடிப்புகளைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளியில் குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மாணவர்களால்...

இலங்கையில் 16 பகுதிகளில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மொனராகலை - புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம்...

உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி: காணொளி இணைப்பால் வெளியான புதிய சர்ச்சை

உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியிருந்தாக...

கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால்...

கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு...

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர். இதில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 197 பேர்...

இலங்கையில் நிலநடுக்கம்!!

புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புத்தலவில் 2.4 ரிச்டர் அளவுகோலில் சிறிய நடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திலீபனின் தியாகம் அதி உன்னதமானது: சம்பந்தன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் - உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது. திலீபனின் தியாகத்தை...

உயிர்போகும் வரை உக்ரைனியர்களை கொடுமைப்படுத்தும் ரஷ்யா: ஐ.நா அதிர்ச்சி தகவல்

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை...

சாந்தனை மீட்டுத் தாருங்கள்! தாய் கோரிக்கை!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த ஆண்டு இந்திய மத்திய...

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”...
Loading posts...

All posts loaded

No more posts