Ad Widget

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

அந்த நாட்டின் மலுக்கு மாகாணத்திலுள்ள டொபேலோ நகருக்கு 94 கி.மீ. வடக்கே 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கங்களின் அதிா்வுகள் அருகிலுள்ள தீவுகளில் நன்கு உணரப்பட்டது. எனினும், அந்தப் பகுதிகளில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயமும் இல்லை என்று இந்தோனேசிய வானியல் மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

2.70 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா அருகே இந்திய பெருங்கடலில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Related Posts