154 கிலோ கேரளா கஞ்சாவுடன் 05 பேர் கைது

154 கிலோகிராம் கேரளா கஞ்சா விநியோகம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நடவடிக்கையில் இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் உடுத்துறை கடற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் கைது...

காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகிறது; சுத்தம் செய்யும் பணியில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...
Ad Widget

உயிர் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தனும் சுமந்திரனுமே முழுப் பொறுப்பு!

சுமந்திரனுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல் நிலவுகின்றமையை எங்களுடன் தொடர்புபடுத்திச் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று ஆற்றிய உரை தொடர்பாகப்...

இலங்கையின் இருட்டறை : இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம்

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்...

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

வீதியில் அபாயகரமான கத்தியுடன்திரிந்தவருக்கு சிறை

இரவு நேரம் திருடும் நோக்குடன் அபாயகரமான கத்தி, குறடுகளுடன் வீதியில் திரிந்தவருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 5 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், புதன்கிழமை (22) தீர்ப்பளித்தார். ஏழாலை - கிழக்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இரவு நேர...

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...

ஆணுறுப்பை குறட்டால் நசித்தனர்; பிணத்தையும் அடித்து துன்புறுத்தினர்

“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள்,...

கதிர்காமம் புனித பூமியில்அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கேஹசாப் தலைமையிலான அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலர் கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த வழிபாடுகளுக்கான நேற்று இவர்கள் கதிர்காமம் புனித பூமிக்கு வருகை தந்திருந்தனர். அமெரிக்க தூதுவர்களுடன் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சிலரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் வனவிலங்குதுறை காமினி ஜயவிக்கிரம பெரேரா வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி...

சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற இலங்கையர் கைது

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பைபர் படகில் வந்த இலங்கை அகதியை உளவுப்பிரிவு பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 16ம் திகதி பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த இப்படகு இந்தியா வந்தது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மண்டபம்...

இராணுவத்தினர் தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக சந்திரிக்கா கூறவில்லை!

இலங்கை இராணுவத்தினரால் வடக்கில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எங்கும் கூறவில்லை என, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன அண்மையில் கூறிய கருத்து தொடர்பில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்ட...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...

வடக்கில் 6124 ஏக்கர் காணியை உட­ன­டி­யாக விடு­வி­க்க வேண்டும்! ஐ.நா

வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். மேலும் கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­வதும் முக்­கி­ய­மா­ன­தாகும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா...

வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பையும், தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்!

காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதா?

இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவற்றைத் தாரைவார்ப்பதற்கான திட்டமொன்று இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது தொடர்பிலான உண்மை விபரங்கள் வெளிப்படுத்தப்பட...

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் கதவடைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு...

யுத்தத்தின்போது தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்: சம்பந்தன்

தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவது கட்டாயமென கேட்டுக்கொண்டார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனியாவது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தேசிய...

வடக்கிலுள்ள புத்தர் சிலை உடைப்பின் பின்னணியில் தென்னிலங்கை சூத்திரதாரிகள்!

வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அண்மையில் புத்தர் சிலை மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள குழுவொன்றைச் சார்ந்தவர்களே செயற்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறான சூத்திரதாரிகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...

மீண்டும் சியான் விக்ரமுடன் இணையும் த்ரிஷா

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 'சாமி 2' கதாநாயகியாக நடிகர் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை 'சாமி 2' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உறுதி செய்துள்ளார். மேலும், மீண்டும் தனது வெற்றிக்கு கூட்டணியில் இணைய ஆர்வமாக உள்ளதாக த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான 'சாமி'...

`விஜய் 62′ யாருடன் தெரியுமா?

`துப்பாக்கி', `கத்தி' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. `பைரவா' படத்திற்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்படும் நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல்...
Loading posts...

All posts loaded

No more posts