இராணுவத்தினர் தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக சந்திரிக்கா கூறவில்லை!

இலங்கை இராணுவத்தினரால் வடக்கில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எங்கும் கூறவில்லை என, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன அண்மையில் கூறிய கருத்து தொடர்பில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பிரதானி ஒருவர், இராணுவத்தினர் தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ளதாகவும், இது இராணுவத்தினரின் பிரதி விம்பத்திற்கும் நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ரோஷான் செனவிரத்ன குறிப்பிட்டிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தமது அலுவலகத்தின் தலைவரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவ்வாறு எங்கும் கூறவில்லை என, குறித்த அலுவலகத்தினால் வௌிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சந்திரிக்கா இராணுவத்தினர் பற்றி கூறியதாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் வௌியிடுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts