Ad Widget

வடக்கிலுள்ள புத்தர் சிலை உடைப்பின் பின்னணியில் தென்னிலங்கை சூத்திரதாரிகள்!

வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அண்மையில் புத்தர் சிலை மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள குழுவொன்றைச் சார்ந்தவர்களே செயற்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறான சூத்திரதாரிகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்கப்பெற்று, ஜனநாயக ரீதியிலான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதே நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கான சிறந்த பாதையென்றும் பிமல் ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சர்வதேச சமூகத்தால் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தரப்பினர் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts