கிளிநொச்சியில் கர்ப்பிணிகள், சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10.02.2017 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக...

காணிகளை விடுவிக்கக் கோரி இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாணத்தில் ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
Ad Widget

வடக்கில் முதன்முதலாக சாரதி நடத்துனர் சங்கம்

வவுனியா தனியார் பஸ்களில் பணியாற்றும் சாரதி, நடத்துனர்களை உள்ளடக்கிய சங்கமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்படும் வகையில் இந்த சங்கமானது வட மாகாணத்தில் முதன்முதலாக நேற்று உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ். ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த சங்கத்துக்கான...

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன: பத்மினி

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம்!

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கான மின் உற்பத்திக்கு மேலதிகமாக 51 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்படுமென்று மின்சார சபை கணக்கிட்டுள்ளது. இந்த செலவுத் தொகை பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட...

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்... கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு...

பட்டதாரிகள் பிரச்சினைக்கு இந்த மாத இறுதிக்குள் தீர்வு

வடக்­கில் யாழ்ப்­பா­ணம் தொடங்கி கிழக்­கில் திரு­கோ­ண­மலை வரை விரி­வ­டைந்­துள்ள பட்­ட­தா­ரி­க­ளின் போராட்­டம் தொடர்­பாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரப் பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தின் யாழ் மாவட்ட இணைப்­பா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அங்­க­ஜன் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அந்த அறிக்­கை­யி­லேயே அவா் தெரி­வித்­துள்­ள­தா­வது, இன்று யாழ்ப்­பா­ணத்­தில் பட்­ட­தா­ரி­க­ளால் சுழற்­சி­ மு­றைப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு நடை­பெ­று­கின்­றது .இது கிழக்­கி­லும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பட்­ட­தா­ரி­க­ளி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும்...

முன்னாள் போராளிகளை கண்காணியுங்கள்! : ஜனாதிபதியிடம் கருணா கோரிக்கை!

வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையில், இரு மாகாணங்களிலும் ராணுவத்தின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 14 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கண்காணிப்பதற்கு...

“சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. “சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும்...

கிராமத்து தலைவரானார் விஜய்

தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர்...

22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி!

22 வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. நக்மா, ரகுவரன், யுவராணி உள்பட பலர் நடித்த அப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அப்படம் ரஜினி படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படமானது. அதோடு, இப்போதும் தான் நடித்த படங்களில் தனக்கு அதிகம் பிடித்தமான படமாக ரஜினி குறிப்பிடுவதும் பாட்ஷாவைதான். அந்த அளவுக்கு...

அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல, மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல் என, கமல் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ. மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள்...

சைட்டம் போதனா வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்! -ராஜித

தனியார் மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் சைட்டம் போதனா வைத்தியசாலை, விரைவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி...

இலங்கை தனியார்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஆயுள் காப்புறுதி

ஆபத்தான தொழிற்துறைகளில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊழியர் ஒருவர் மரணமடையும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும்...

காணாமல் போனோரின் உறவுகள் இன்றும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின்...

சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும் -கஜேந்திரகுமார்

ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டதினரையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான...

கடும் பஞ்சம் 48 மணிநேரத்தில் 110 பேர் பலி, அவரச உதவி கோருகிறது சோமாலியா!

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாதிரம் 110 பேர் மரணமாகியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது. ஆனால், நாட்டின்...

அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி

தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...

சிசுவை குழி தோண்டி புதைத்த யுவதி

கிளிநொச்சி - ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும்...
Loading posts...

All posts loaded

No more posts