யாழில் தியாக தீபத்திற்கு அஞ்சலி!

மாவீரர் நாளான இன்று(27) அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர்...

சிறையில் இருந்து வந்த நபர் சடலமாக மீட்பு!

சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Widget

மாவீர்ரகளை கௌரவிக்க புதுக்குடியிருப்பில் கதவடைப்பு!!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமை போன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளனர். புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் இதனைத் தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக்...

பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்!!

விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்றுமதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...

யாழ். பல்கலையில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில்...

மீண்டும் சூடு பிடிக்கும் போர்க்களம்! உக்ரைனை சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள்!!

கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது. 75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் இதில் 40 ட்ரோன்கள் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷ்யா நடத்திய இந்த திடீர் பயங்கர ட்ரோன் தாக்குதலில், தலைநகர் கீவ் பகுதியில் உள்ள...

கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!!

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம்...

முல்லைத்தீவில் பொலிஸாரால் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான...

கார்த்திகை வாசம் ஆரம்பம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ”கார்த்திகை வாசம்” என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சிவிகே சிவஞானத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக அரசியற் செயற்பாட்டாளர்...

பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய மர்ம நபர்கள்!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு வீடொன்றுக்கு விசாரணை மேற்கொள்ளச்சென்றுள்ள நிலையிலேயே அவரது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ வைத்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில்...

நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

வடமராட்சி – நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகைதரும் மக்கள் மாவீரர்களுக்கு மலர்தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி...

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

நாவற்குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளை, தனது காணிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளரால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: அந்த நாட்டின் மலுக்கு மாகாணத்திலுள்ள டொபேலோ நகருக்கு 94 கி.மீ. வடக்கே 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் அதிா்வுகள் அருகிலுள்ள தீவுகளில் நன்கு...

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது. அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த...

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது!!

யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ,...

இடி, மின்னலுடனான மழை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பலத்த மின்னலுடனும் இடிமுழக்கத்துடனும் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்தி மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன்...

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

நல்லூரில் மாவீரர்களின் பெயர்களுடன் நினைவு மண்டபம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts