- Wednesday
- September 10th, 2025

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (29) இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர், மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக...

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வீட்டில் இருந்து 5 பவுன் பெறுமதியான நகை காணாமற் போயுள்ளதால் திருட்டில்...

இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே...

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து...

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின்...

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறும் போது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் முல்லைதீவு கொக்குத்தொடுவாய்...

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து...

காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசமானது கடந்த...

வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை சட்டத்தரணிகளின் துணையுடன் கூட்டிச் சென்று உயிரிழந்த இளைஞனை பொலிஸார் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி வட்டுக்கோட்டை...

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் நேற்றைய தினம்(28) இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை...

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும் 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்....

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் `கட்டியம்`சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்படப் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்”...

சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கஜந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவகத்தில் பணியில் இருந்த வேளை மின்சாரம் தாக்கியதாகவும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது....

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பாகவே நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை புலிகளின் தலைவரின்...

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர்...

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் மரிக்கவில்லை -துவாரகா பிரபாகரன்
ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என 'தமிழ் ஒளி' இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி...

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம்...

All posts loaded
No more posts