கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து...

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை...
Ad Widget

நாமல் ராஜபக்ஷ கைது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2013...

மட்டக்களப்பு கடலில் சோகம்: படகு கவிழ்ந்து கோர விபத்து!

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். இதன்போது,...

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்!!

தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றுவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும். ‎ அதன்படி,...

வவுனியா மேல் நீதிமன்றினால் மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது நிரம்பிய சொந்த...

ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்!

உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டுக்கென பிரத்யேக நகரம் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று (03) உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ (Tamil Nadu Olympic City) அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்....

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி: இந்திய – இலங்கை இடையே விசேட கலந்துரையாடல்

இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் நேற்று (03) முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி...

‘சித்தா’ பட இயக்குநருடன் இணைந்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து சண்டை கலைஞர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234 ஆவது படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்படம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் உடன் இணைந்து...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர்...

ரவி மோகன் திரைப்படத்திற்கு இசையமைக்கிறாரா கெனிஷா?

ஜெயம் ரவி என பரவலாக அறியப்பட்ட ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தொடர்ந்து ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் நெருக்கத்தில் இருந்தார். மனைவியை பிரிந்த பின்னர் கெனிஷாவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரவி மோகன் கலந்து கொண்டார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று...

இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்...

நாமல் ராஜபக்ஷ இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை 63 ஆவது கூட்டத்தொடர்...

குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!!

எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்க பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து...

வலி வடக்கு காணி விடுவிப்பு – இம்மாத இறுதியில்!!

யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடத்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி...

ETF, EPF நிதிகளை மத்திய வங்கியிடம் இருந்து பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02)...

விடுதலைப் புலிகள் முகாம் புரளி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக...

பரீட்சை பெறுபேறு – பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைப்...

மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமா??

எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள்,...
Loading posts...

All posts loaded

No more posts