- Saturday
- May 16th, 2026
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும்...
தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்....
மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த கோர பேரழிவால் தற்போது வரை...
தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக...
சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை வடமாகாண முதலமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச சுற்றுலா தினம் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம், வடமாகாணத்தில்...
இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நேற்று (புதன்கிழமை) காலை உரையாற்றிய போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார். மேற்குறித்த விடயங்கள்...
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த நிகழ்வுக்கு அனுமதித்துவந்த தமிழக அரசு திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்தது. நிகழ்வில் பங்கேற்றவர்களை பொலிஸார் கைதுசெய்தனர். மே...
இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு 13 வருடங்களுக்கு தொடர்ச்சியாகக் கல்வியை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் கல்வி அமைச்சின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்திலிருந்து...
அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்குவதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை 7வது நாளாக இன்றும் தொடர்கிறது. மேலும் குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தில் தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கம், மின் அத்தியட்சகர் சங்கம்...
ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக “ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணி” தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ரயில்...
நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்....
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்த சட்டமூலதத்திற்கு பெரும்பாலான மாகாண சபைகள் தங்களுடைய எதிா்ப்பை தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினா் இணைந்து அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக...
”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்ததியை எதிர்நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப்பொருளில் யாழில் விவசாயக் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. மாகாண விவசாய அமைச்சினால் யாழ். திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சார்பாக கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆரம்பித்துவைத்தார். யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு...
கிராமத்தின் மத்தியில் இருக்கும் மயானத்தை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கலைமதி கிராமமக்கள் 300 பேரையும் யாழ். மேல் நீதிமன்றத்துக்கு வரவழைத்து அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி இளஞ்செழியன். குறித்த வழக்கானது நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நீதிமன்றத்திற்கு வருமாறு கிராம அலுவலகர் ஊடாக நீதிபதி இளஞ்செழியன்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பவுண்டேசனில் நடைபெற்ற சிறைக்கைதிகள் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 பேரின் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வடக்கு மாகாணத்தை நோக்கி நகர்வதால் இரு தினங்களுக்கு பலத்த காற்று வீசுவதுடன் மழையும் பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருகின்றன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் சடுதியான காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாழமுக்கமானது தற்போது இலங்கையின்...
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் கல்முனையில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் கூட்டம்...
பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்த சில நிமிடத்தில் அந்தப் பாம்பு போத்தலுக்குள் 10 குட்டிகளைப் போட்டதால் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது அவர் சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம்...
மின்சார சேவை தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று மாலை மின்சார சேவை தொழிற்சங்கத்துடன் தொழில்துறை அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிராத்ன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன்...
Loading posts...
All posts loaded
No more posts
