- Thursday
- May 14th, 2026
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து,...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் பல பாகங்களில் பேஸ்புக் மற்றும் வட்ஸ்ஆப் போன்ற வலையமைப்பு...
சாவகச்சேரி நகரத்தில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் பொது மலசல கூடத்திலிருந்து குறித்த சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை...
அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த முன்பிணை வழங்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற...
இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார். ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு இனம் சந்தோசப்படும் நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர்...
2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீதான அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று எம்மீது குற்றம் சுமத்தியதுடன், சில தமிழ்...
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்தார். 10 நாள்களுக்கு அவசரகாலச்...
வழமைக்கு மாறாக இன்று கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில...
கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் குறித்த நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார். இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட...
சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் சபை தெரிவித்துள்ளது. சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று நடைபெறவுள்ளது. விளையாட்டு மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெருக்கடியை...
கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று...
அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்...
கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....
அவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கங்களுடன் ரோஹிங்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரு குடும்பங்களும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி...
“வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக” வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்...
காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விற்பனை செய்வதற்கு மிகவும் நூதனமான முறையில் கஞ்சாவை மறைத்து வைத்து சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவர்...
தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய...
Loading posts...
All posts loaded
No more posts
