- Sunday
- May 10th, 2026
கத்தி, கொட்டன்களுடன் அதிகாலையில் வீடுகளுக் குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஐந்து வீடுகளில் இருந்த பொருள்கள், வேலிகள், மின்குமிழ் கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பம் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏழாலையில் நடந்துள்ளது. கொக்குவில், சுன்னாகம், இணுவில், மானிப்பாய் பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்வன்முறைச் சம்பவங்களையடுத்து அந்தப் பகுதிகளில் 24 மணிநேரம் சுற்றுக்காவல்...
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கம் செல்லும் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலமை ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த முறுகல்நீடித்த முறுகல் நிலமை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு வந்தது. வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கமாக செல்லுத்...
வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாயில் நேற்றுமுன்தினம் காலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். உந்துருளியில் வந்த இருவர் வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத் தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர்...
யாழ்ப்பாண சிவில் சமூகமhனது நேற்று காலை 11 மணிக்கு வடமாகாண முதைலமச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேசியது. முக்கியமாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் 29 நாட்களாக உணவு தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களுடைய நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை வாழவைப்பதற்கு...
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் வழங்கிய தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். கலாசார ரீதியான பயணமாக விஜயம் வெய்த அவர்கள் அங்கு பலவேறு...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது. இதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர். ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின்...
சுமார் ஒரு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொன்னாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பொன்னாலைப்...
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர். அதன்போது, கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை...
ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது என தெரிவித்த வடக்கு முதலமைச்சர், அமைச்சர் தலதா அத்துகோரல கூறிய கருத்து தவறு என சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினரை கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன் பின்னர் கருத்து...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “நான் அறிந்தவகையில் 2001 ஆம் ஆண்டு,...
நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமையை பறிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனினும், சிவசக்தி ஆனந்தனின், இந்த குற்றச்சாட்டுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரு...
அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து ஐயாயிரம் ரூபா போலித்தாள்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ். உப பொலிஸ் பரிசோதகர் அனில் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இவ்வாறு குறித்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த கடையில் போலித்தாள்கள் கைமாற்றம் செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு...
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவியையும் அவரைப் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற தந்தையாரும் காயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நகரில் முட்டாஸ் சந்திக்கு...
நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான MSF இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. MSF தொண்டு நிறுவனம் கடந்த 11 மாதங்களாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாமில் பணிகளை மேற்கொண்டது. எனினும், நவ்ரு அதிகாரிகளால் குறித்த தொண்டு நிறுவனம் வெளியேற்றப்பட்டது. தாம்...
தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கை...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த...
Loading posts...
All posts loaded
No more posts
