- Thursday
- May 7th, 2026
நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும்...
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது...
மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு தாக்குதல்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சகல பகுதிகளிலும் பொலிஸார் மற்றும்...
மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை , வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் இன்று(22) திங்கட்கிழமை விடுமுறை...
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வெளி வீதியில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிசிரிவி காணொலிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வான் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இதேவேளை, தாக்குதல்களுக்கு காரணமான குழுவின் பெயரை...
நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நேற்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ்...
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக்கடிதம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இவர் சிரேஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்தி உத்தியோகத்தர் ஆவார். அவரின் நியமனத்தையிட்டு யாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியிலுள்ளனர். வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் இந்ந நியமனத்தை...
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கல் நடைபெற்றது....
ஊடகவியலாளர் இ.தயாபரன் விபத்தில் காயமடைந்தாரா அல்லது அவர் மீது தாக்குதல் இடம்பெற்றதா என்பது தொடர்பாக உடனடி விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஊடகவியலாளர் தயாபரனை வடக்கு மாகாண ஆளுநர் நேற்று இரவு 9.15 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டபோதே இவ்வாறு கூறினார். யாழ்.ஊடக...
மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். அத்தோடு அவர் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு...
முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன. இதன்போது, வீட்டின் கூரைகள் வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளை, குறித்த...
முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே கடந்த வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக்...
இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் சமீப காலமாக இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடக...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
