காய்சலுக்காக பயண்படுத்தும் மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

தற்போதைய சூழ்நிலையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும்...

உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு – பிரதமர் ரணில்

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும்போது உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனினும், வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர், வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன், அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது...
Ad Widget

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க இடமளிக்க மாட்டேன் – ரணில்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...

நல்லூர் திருவிழா: தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்குமாறு வலியுறுத்து

நல்லூர் ஆலயத் திருவிழா காலத்தில் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலாசார உடைகளை பக்தர்கள் அனைவரும் அணிந்து வரவேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கோயிலின் பெரும்...

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்குள் கைகலப்பு – நால்வர் காயம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடு நீடித்த நிலையில் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில்...

வடக்கில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது...

பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதன்!!

தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா. என்ன... பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. ஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர்,...

அரிசியில் கலப்படம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டன. இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய...

சாந்தி எம்.பி தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார் – சிவமோகன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார், ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி மரணம்!

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (வயது -72) என்பவரே கொல்லப்பட்டார். வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே...

முல்லைத்தீவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்றம்!

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி நேற்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி எப்போதும் அவதானமாக இருக்கவேண்டும் – பிரதமர் எச்சரிக்கை

“பயங்கரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. ஒன்று முடிந்தது என்று நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நாம் நினைக்க முடியாதவற்றை அவர்கள் செய்வார்கள். ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல. சிறிய கத்தியும் ஆயுதம்தான். வாகனங்களைக் கொண்டு மக்கள் மீது மோதி ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். நாங்கள்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” என்று பிரதமர்...

யாழ்.மாநகர 107 உணவகங்களில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீடுகேடு!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட 107 உணவகங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால்நேற்று சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்பட்டுள்ளன. 12 உணவகங்களில் காணப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன், 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த திடீர் சோதனை நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு...

சஜித்திற்காக 1000 தேங்காய் உடைத்து வழிபட்ட தமிழர்கள்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் வடமாகாண மக்கள் 1000 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வருகை...

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் இன்று நாமல்...

நீர்கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவு!!

நீர்கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை...

யாழில் புதிய இராணுவ சோதனைச் சாவடிகள்!!

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27 நாள்கள் திருவிழா...

நல்லூருக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் – இம்மானுவேல் ஆனோல்ட்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை (இன்று) ஆரம்பமாகவுள்ள, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய...

13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது –சி.வி.விக்னேஸ்வரன்

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம்...

நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில்!

நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. அந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள்...
Loading posts...

All posts loaded

No more posts