- Saturday
- July 25th, 2026
நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சிவில் விமானம் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்தோடு மறு அறிவித்தல் வரும் வரை குறித்த தடை அமுலில் இருக்குமென சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்தசிறி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று...
கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை...
நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் பிற்பகல் 2 மணிக்கு வௌியிடப்படும் என கல்வி அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் இருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரும், சோமாவதி புனித தளத்துக்கு யாத்திரை சென்ற ஒருவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குறித்த இருவரையும் அங்கொட...
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உள்படுத்தப்படவில்லை என அதன் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். “நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் இத்தனை நாளாக பொலிஸாரினால்...
யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்டார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது -36 ) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு...
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 585 பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய...
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 22 மாவட்ட செயலகங்களில் இன்று ஆரம்பமாகுகின்றது. இதற்கமைவாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை வார நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சியொன்றில் செயலாளரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் அல்லது குழுவின்...
கொரோனா (கொவிட்-19) ஒரு உலகளாவிய தொற்று நோய். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கொரோனா வைரஸின் பரவலை உலகளாவிய ரீதியிலான தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்துள்ளது. இந்த நோயின் வியாபகம் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று (மார்ச் 11) புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த பதவிநீக்க உத்தரவை வழங்கியுள்ளார். வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரன் கடந்த மார்ச்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரின் உறவினர்களை கொழும்பில் அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அங்கொடையில் அமைந்துள்ள ஐ.டி.எச். வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் குடும்பத்தினரை வீட்டுக் காவலில் கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில்...
அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளது. பழைய மாணவர்கள் ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல்...
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை...
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனால் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவரிடம் ஒப்படைக்க வேண்டும்...
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான அறிமுக நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வன்னிதேர்தல்...
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில்...
மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள...
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது. அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு...
யாழ்.இளவாலை பகுதியில் கடற்படை சிப்பாயை சூலத்தால் குத்திய இளைஞன் மீது பொலிஸாா் நடாத்திய தாக்குதலையடுத்து சூலத்தால் குத்து வாங்கிய கடற்படை சிப்பாயும், பொலிஸாரால் தாக்க ப்பட்ட இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...
Loading posts...
All posts loaded
No more posts
