வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன் பதவிநீக்கம் – ஆளுநர் அதிரடி

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இன்று (மார்ச் 11) புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த பதவிநீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரன் கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடக்கம் மீளவும் அந்தப் பதவியில் தொடர ஆளுநரால் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் 4ஆம் திகதிய நியமனக் கடிதத்தை இன்று (மார்ச் 11) நடைமுறைக்கு வரும்வகையில் மீளப்பெறுவதாக ஆளுநரால் நேற்று கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts