யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடும்!

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில்...

கே.கே.எஸ் கடலில் குளித்த இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர் தெரிவித்தனர். மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்....
Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா நாளை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி!! ஐவர் கைது!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவாங்கொட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டியதாக, நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர். அவருடன் கைதானவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புபட்டமைக்கான சான்றுகள் கிடைக்காதமையினால்...

தமிழர் ஒருவரைத் தாருங்கள் வடக்கு ஆளுநராக நியமிக்கின்றேன் – ஜனாதிபதி

“வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. தமது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு ஏனைய...

சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்!

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன்...

மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதியினை இரத்து செய்ய தீர்மானம்!

நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதியினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர்...

சி.சி.ரி.வி. கமராவை பொருத்திய அரச அலுவலருக்கு அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது யாழ்ப்பாணம் மாநகர சபை ஊடாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன், அந்தப் பகுதியில் வசிக்கும் அரச அலுவலகர், மாநகர சபை உறுப்பினர்கள் முன்னிலையில் அண்மையில்...

யாழில் குழு மோதல் காரணமாக ஒருவர் மீது வாள் வெட்டு!!

கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர். அஜித் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளார். வெட்டுக்...

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு!

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது. நிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது. வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான...

இன்று இரவு முதல் கன மழை பெய்ய வாய்ப்பு – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்த குறைந்தமட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (புதன்கிழமை) இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என அத்திணைக்களம்...

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு!

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின்...

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா!!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா. தனது கனடா நாட்டு...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் – கஜேந்திரகுமார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத்...

யாழில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று...

தையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

யாழில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!! இராணுவம் களத்தில்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியின் வழிகாட்டல் இந்தப் பணி இடம்பெறுவதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த நடவடிக்கை யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் இன்று ஆரம்பித்து...

கைத்தொலைபேசி வைத்திருப்போருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன. அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கியுள்ள ஆனால் தற்போது பாவிக்காத பழைய சிம் அட்டைகள் இருந்தால் அவற்றை டிஅக்டிவேட் செய்து கொள்ளுங்கள்....

ஜனவரி 3ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படிநேற்று (2) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
Loading posts...

All posts loaded

No more posts