Ad Widget

ஊரடங்கு வேளையில் வீதியில் பயணித்தால் வாகனம் கையகப்படுத்தப்படும் – பொலிஸ் எச்சரிக்கை

ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

“அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப் பயணிப்போர் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். வெளிநாடு பயணமாவோர் நுழைவுவிசைவு மற்றும் கடவுச்சீட்டு என்பன காண்பிக்கவேண்டும்.

ஏனையோர் வாகனத்தில் பயணித்தால் வாகனம் பொலிஸாரால் கையகப்படுத்தப்படும். அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts