தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர இருக்கிறார்- விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாகநேற்று (திங்கட்கிழமை), க.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த...

யாழில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் அனைவரும்...
Ad Widget

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

மத்திய அதிகேவக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாணத்திற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் ரண்சர மண்டபத்தில் இடம்பெற்ற...

கஜேந்திரகுமார் எம்பியின் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை...

மானிப்பாயில் 8 மாத சிசு மூச்சுத் திணறலால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் 8 மாத ஆண் சிசு ஒன்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (17) காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிசு, சில மணி நேரங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. சிசுவின் உயிரிழப்புக் காரணம் தெரியாத நிலையில், சடலத்தைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று...

திருநெல்வேலி சந்தையில் அடையாளம் காணப்பட்டவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்

திருநெல்வேலி சந்தையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதனால் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. “மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தோற்று...

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்று முதல் அன்டிஜன் பரிசோதனை

இன்று முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்களுக்கு விரைவான அன்டிஜன் பரிசோதனை அல்லது சீரற்ற அன்டிபாடி பரிசோதனை நடத்தப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். “மேல் மாகாணத்திலிருந்து புறப்படும் நபர்களை பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வழிகள்...

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கோரோனா!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் பெறப்பட்டு தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைப்பட்டன. அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில்...

யாழ்ப்பாணத்தில் ஒக்டோபரிலிருந்து 93 பேருக்கு கோரோனா தொற்று; 21 பேர் குணமடைந்தனர் – 1,400 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 நோய்த் தொற்று நிலமைகளையடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 818 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அத்துடன், கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்ட 88 பேர், சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்....

யாழில் ஐவருக்கு தொற்று- மருதனார்மடம் கொத்தணி 73ஆக உயர்வு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் இணுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கோப்பாய்...

கூட்டமைப்போடு கலந்துரையாடி முடிவெடுப்போம் – மணிவண்ணன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே வி.மணிவரை...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில...

பஸ் பயணிகள், நடத்துனர்களுக்கான அறிவித்தல்!

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களினை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளனர். பயணிகளின் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை நடத்துநர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணியொருவருக்கு கொரோனா தொற்று...

இரண்டு வாரங்களுக்கு அவதானம் தேவை!! – யாழில் இராணுவத் தளபதி

எதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... “தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கத்தின்...

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – GMOA

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். ஒரு பிரதேசம்...

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும் எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இணைய வழி மூலமான கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த...

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் அங்கஜன் எம்.பி

நேற்றைய தினம் (16) லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. அந்த தொடரில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதுவப்படுத்தும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் ஆபார வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு வாழ்த்து...

வடமாகாண பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தல்!!

கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நிலமையை அடுத்து பொதுச் சந்தைகள்...

தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களின் விவரம் கோரல்!

2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அதன்படி, கல்வி அமைச்சுக்கு தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி வரும் டிசெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. https://ncoe.moe.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம்...
Loading posts...

All posts loaded

No more posts