- Monday
- April 27th, 2026
ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார் 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அவர் இன்று காலை நெல்லியடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தெல்லிப்பழை கட்டுவனில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 36 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் 21 கிராம் போதைப்பொருளுடன்...
வட்டுக்கோட்டை- தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப்பங்களிப்பில், வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை,...
இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) இரவு வாழ்த்து தெரிவித்துள்ளார். பானுக ராஜபக்ஷ தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியுடன் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், திசர பெரேரா...
நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்கான நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்ப படிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி வடக்கு, கரைச்சி, வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பூர்த்தி...
கோரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் படையினர் கோரும் போது, தனிப்பட்ட தகவல்களை வழங்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பொது மக்களிடம் பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் தொற்று நோய்களைத் தடுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன. நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா...
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் அவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய சலுகை வட்டி விகிதத்தில் கடன் உதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்தக் கடன் திட்டம் 03 பிரிவுகளின்...
மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று (டிசெ. 16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2...
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனுராதபுரம் வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று 2020.12.16 இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்...
யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி சங்கானையில் 4 பேருக்கும் உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர் நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டில்...
திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (புதன்கிழமை) பெறப்பட்டன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாகவே இன்றையதினம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை...
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளான இந்திய உறவுகளுக்கும் எமக்கும் பகையுணர்வை ஏற்படுத்தாது எல்லை தாண்டிய மீன்பிடியை தடுத்து நிறுத்தி, எமது வாழ்வாதாரத்துக்கு...
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பதவியிழந்தார். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு...
கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருள்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினருடன் (சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை அலுவலகரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும். இவ்வாறு வடமாகாண...
கொரோனா இரண்டாம் அலையில் வடக்கில் 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பழையில் சமூகத்தொற்றாக மாறியுள்ளதா என்பதை அறிய பிசிஆர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில நேற்று...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச...
Loading posts...
All posts loaded
No more posts
