- Saturday
- July 11th, 2026
நாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தற்போது 18 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின்...
கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவல் வீதத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு, ‘சமூக பரவல்’ என்ற வார்த்தையின்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே.எகொடவெல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் – பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் குறித்த போராட்டத்தால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை...
மூன்று நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை...
நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (திங்கட்கிழமை1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு, இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்கள் படகுகளை...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 11 ஆயிரத்து 185ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 1056 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பேரணியின் நிறைவிலேயே ”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள். கிடைக்காது...
நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் பலாலி விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு...
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன்...
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கச்சதீவு தூய அந்தோனியார் ஆலயஅருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார். யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற...
நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாகவும், இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
