யாழில் புதுவருட கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஆர்வம் குறைவு!!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என யாழ். வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை, மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையில் இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக...

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் – கூட்டமைப்பு

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும்...
Ad Widget

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து!!

எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்தது கையொப்பமிட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையெழுத்திட்டிருந்தார். இதேநேரம்...

தமிழ் சிங்கள புத்தாண்டு : மின்வெட்டு குறித்து அறிவிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் கொரிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில் மக்களை பொறுமையாக இருக்குமாறும், இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபபக்ஸ குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஆற்றிய முழுமையான உரை! எங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்...

மேலும் ஐந்து குடும்பத்தை சேர்ந்த 19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (10) அதிகாலை இரண்டு கை குழந்தையுடன் 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 19 இலங்கை...

மணியந்தோட்டத்தில் பெண்ணை அடித்துக்கொலை செய்தமைக்கான காரணம் வெளியாகியது!!

அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் குடும்பப்பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைப்பதற்கு இளைஞனின் தாயின் சகோதரி தூண்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ஆம் திகதி காணாமற்போன குடும்பப் பெண்...

ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று காலை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய மழையுடனான வானிலை ஏப்ரல் 14ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும்...

மழைக்கு மத்தியில் கொழும்பில் தொடரும் போராட்டம்!

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அலுவலகம் எதிரே முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கிறது. நேற்றமுன்தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டம் இன்று மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை – முக்கிய அறிவிப்பு!!

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப்...

வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை – மழை தொடரும்!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு,...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரணப் பொதி!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை...

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல்...

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது. அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று (12.04.2022 வரை)நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த மழை இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் இடி மின்னல் நிகழ்வு...

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்!!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின்...

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்...
Loading posts...

All posts loaded

No more posts