பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சேவைகள் இடம்பெற்ற போதும் காலை 6.30 மணிக்கு வந்த அறிவிப்பையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று நாடுமுழுவதும் கடையடைப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இந்த நிலையிலேயே இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழு நியமனம்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது...
Ad Widget

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும்...

அதிகரித்தது பஸ் கட்டணங்கள்!!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தாமான பஸ் கட்டணங்கள் 35 வீதத்தினால் அதிகரித்துளளதாக தேசிய போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 35% அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 20 இலிருந்து 7 ரூபாவினால் அதிகரித்து 27 ரூபாவாக...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகளும் அதிகரிப்பு

பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை...

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு !

கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் 84 ரூபாயினாலும் டீசல் 113 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (ஏப்ரல் 19) முதல் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார். இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 84 ரூபாயினால் அதிகரித்து 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 90 ரூபாயினால் 373 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்....

உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாமில்லை – அரசாங்கம்

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக...

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தினேஸ் குணவர்தன - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம் பிரசன்ன ரணதுங்க - பாதுகாப்பு, சுற்றுலா திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து கனக ஹேரத்-...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார். நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி...

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் – பிரியந்த விஜயசூர்ய

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்தார். காங்கேசன்தறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,...

யாழில் தீப்பந்த போராட்டம்!!

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில்...

தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரு இலங்கையர்கள் கைது !

பட்டுக்கோட்டை கடல் பகுதியில், உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த கியூ பிரிவு பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் பகுதியில், இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்றும், அதில் இரண்டு இளைஞர்கள் இருப்பதையும் அந்தப்...

யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு!!

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ் .நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது . குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த ஏழு நாட்களுக்கு மேல்லாகியும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

இந்த ஆண்டும் எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு...

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்!

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் காணப்படுகின்ற மழையுடனான வானிலை இன்று(வியாழக்கிழமை) முதல் சற்றுக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட மூவரில் யுவதியின் சடலம் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது....

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 237 மருந்து வகைகள் தட்டுப்பாடு!!

அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார். மருந்துப் பற்றாக்குறையால் அரச மருத்துவமனைகளும் தனியார் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதய நோயாளிகள், இருமல்,...
Loading posts...

All posts loaded

No more posts