Ad Widget

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று (12.04.2022 வரை)நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்த மழை இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் இடி மின்னல் நிகழ்வு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

மேலும் மேற்காவுகை செயற்பாடு காரணமாக எதிர்வரும் 18.04.2022 வரை நண்பகலுக்கு பின்னர அல்லது இரவில் அல்லது அதிகாலையில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் உணவுப்பொருட்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் விவசாய செயற்பாடுகளை உரிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுடன் மேற்கொள்வது அவற்றை பாதுகாக்கும்.

எனவே விவசாயிகள் இம்முன்னறிவித்தலை கருத்தில் கொண்டு செயற்படுவது அவர்களுக்கு வரக்கூடிய விவசாய பாதிப்புக்களை இயலுமான வரையில் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts