- Friday
- July 10th, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 6 ஆம் திகதி , புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர்...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும்...
ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ( வியாழக்கிழமை) மதியம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து...
எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் சில நாட்களில் இந்த நெருக்கடிகளை தீர்க்க முடியும் என பாராளுமன்ற...
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட...
நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பித்த இரா.சாணக்கியன் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்....
தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த...
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த போது பேருந்தின் சில்லு ஏறியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு (05) 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். “உயிரிழந்தவர் வயாவிளான்...
நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4...
நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். “இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன...
இலங்கையில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்களை அடுத்து அதி விசேட வர்தமானிமூலம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் 05.04.22 நள்ளிரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசுரித்துள்ளார்.
நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவியை இராஜிநாமா செய்தார். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இன்று...
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக...
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
