இன்றும் நாளையும் மின் விநியோகத்தடை!!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை...

திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!!

திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று...
Ad Widget

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம்...

இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயார்!! – இந்திய தூதரகம் விளக்கம்

இலங்கை மக்கள் விரும்பினால், இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள ருவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளதுடன், அதனை கடுமையாக சாடியுள்ளது. இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார்- அதற்கு பதிலாக...

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ரம்புக்கனை சம்பவம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும்...

யாழில் ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல்...

பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சேவைகள் இடம்பெற்ற போதும் காலை 6.30 மணிக்கு வந்த அறிவிப்பையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று நாடுமுழுவதும் கடையடைப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இந்த நிலையிலேயே இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழு நியமனம்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது...

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும்...

அதிகரித்தது பஸ் கட்டணங்கள்!!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தாமான பஸ் கட்டணங்கள் 35 வீதத்தினால் அதிகரித்துளளதாக தேசிய போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 35% அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 20 இலிருந்து 7 ரூபாவினால் அதிகரித்து 27 ரூபாவாக...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகளும் அதிகரிப்பு

பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை...

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு !

கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் 84 ரூபாயினாலும் டீசல் 113 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (ஏப்ரல் 19) முதல் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார். இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 84 ரூபாயினால் அதிகரித்து 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 90 ரூபாயினால் 373 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்....

உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாமில்லை – அரசாங்கம்

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக...

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தினேஸ் குணவர்தன - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம் பிரசன்ன ரணதுங்க - பாதுகாப்பு, சுற்றுலா திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து கனக ஹேரத்-...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார். நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி...

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் – பிரியந்த விஜயசூர்ய

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்தார். காங்கேசன்தறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,...

யாழில் தீப்பந்த போராட்டம்!!

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts