Ad Widget

ரஷ்ய தரப்பிடம் சிக்கிய பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!!

உக்ரைனில் சண்டையிட்டதற்காக ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் பிரித்தானியாவை சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டர்.

எவ்வாறாயினும், தனது சார்பாக பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அஸ்லின் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “ரஷ்ய பினாமிகளால் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள்” பற்றி பேசியதாகவும், மரண தண்டனையை “முற்றிலும் சட்டப்பூர்வமற்ற ஒரு போலி தீர்ப்பு” என்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்திருந்தார்.

உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜைகளின் வழக்குகளை வெளியுறவு அலுவலகம் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், அஸ்லின் மற்றும் பின்னரின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோர் உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் போரிட்டதற்காக தங்கள் மரண தண்டனையை மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அஸ்லினின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஆனால் பின்னரின் சட்டதர்தரணி யூலியா செர்கோவ்னிகோவா ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸிடம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.

“மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு நடைமுறைக்கு வந்தால், மன்னிப்பு கோரிக்கை தாக்கல் செய்யப்படும், ஏனெனில் இது டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சட்டங்களின் அடிப்படையில் எங்கள் வாடிக்கையாளர்களின் தவிர்க்க முடியாத உரிமையாகும்.

“இது மீறப்படக்கூடாது, அதைப் பயன்படுத்த அவர்கள் கடுமையாக வலியுறுத்துகிறார்கள்.” அஸ்லினின் பாட்டி அவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், “நேரம் முடிந்துவிட்டது” என்று எச்சரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

Related Posts